Sunday, October 31, 2010

பணி.ஜஸ்டின் பிரபு சே.ச.வுக்கு வரவேற்பு...

திரு. யேசுராஜனின் மைத்துனர் ஜஸ்டின் பிரபு அவர்கள் 'திருநிலை'ப்படுத்தப்பட்டபிறகு எமது பங்கில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்தோம். தொடர்ந்து அவர் திருப்பலி நிறைவேற்றினார். பிறகு மிக எளிமையான ஒரு பாராட்டு கூட்டமும் நடத்தி சிறு, சிறு பரிசுகளும் வழங்கினார்கள்.
கத்தோலிக்க கம்மாளர் சமுதாயத்திலிருந்து அரிதாக வரும் ஒரு திருநிலைப்படுத்தல் இது. அடிப்படை தமிழர்களான இவர்கள் உயர இத்தகைய நிலைகள் பயன்பட்டால் நல்லது. இன்னும் இயன்ற அனைத்து துறைகளிலும் இவர்கள் செல்லவேண்டும்.

Friday, October 15, 2010

ஈடுபாடில்லாமல்...

அழகான, அருமையான, சின்னஞ்சிறு பங்கென்றபோதும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் தவிக்கிறேன். ஓன்று, போதுமான நேரம் இல்லை. இரண்டு, சில நபர்கள் வெறுப்பூட்டும் அளவுக்கு பேசி உற்சாகத்தை கெடுத்துவிடுகிறார்கள். மூன்று, மறை மாவட்ட பணிப்பழு. நான்கு, போதுமான விசுவாசம் இல்லாதது!

எப்படியோ, ஒரு வகையாக பங்கு பணி நடக்கிறது! ஏழை மக்கள், நல்ல வேலை இல்லாதவர்கள், சொந்தமாக வீடு இல்லாதவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், எப்படியோ வாழ்கிறார்கள்! யார் இவர்களுக்கு ஒரு விடியலை காட்டப்போகிறார்கள்? கடவுள்களுக்கு காணிக்கைபோடும் இந்த ஏழைகளுக்கு கஞ்சி ஊத்த யார்? (தொடரும்... தொடரவேண்டும்...)