இன்றைய குதூகலத்துக்கு, விழாக்கோலத்துக்கு காரணம் நமதருமை ற்றினா, அவளது திருமணம். உயிர்களில் மனித உயிர் மேம்படுவது உறவினால்- அந்த உறவிலேயே உன்னதமான, உணர்ச்சிபூர்வமான, கட்டாயமான உறவு மண உறவு.
தொடக்கத்திலிருந்தே 'அவன் தனிமையில் இருப்பது நன்றன்று, அவனுக்கு ஏற்ற ஒரு துணையை அளிப்போம்' என்று கடவுள் கூறுவதிலிருந்து இது வெளிப்படையாகிறது.
தொடக்கத்திலிருந்தே 'அவன் தனிமையில் இருப்பது நன்றன்று, அவனுக்கு ஏற்ற ஒரு துணையை அளிப்போம்' என்று கடவுள் கூறுவதிலிருந்து இது வெளிப்படையாகிறது.
அந்த உறவு கடவுள் தீர்மானித்தது, நாம் கண்டடைந்தோம், அதையே நிஜமாக்குகிறோம், கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே. இதற்கு நிச்சயம் கடவுள் ஆசீர் உண்டு- அதுவே நமது வழியாகவேண்டும் என்று அவர் விரும்பினால் அதை செய்ய நாம் முன் வரவேண்டும், வருவோம்- நமது ஆசீரால், ஜெபத்தால், தொடர்ந்துள்ள உர்ச்சாகப்படுத்துதலால், ஒத்துழைப்பால்...
இது 'கண்டதும் காதல்' வகையல்ல. பெற்றோரும் மாற்று பெரியோரும் நிச்சயித்து இறைவன் சித்தம் இதுவென உணர்ந்து கண்டுகொண்ட உறவு. இப்படியே ற்றினாவும் ராஜும் ஏற்றுகொள்கிறார்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றார்கள்.
இன்று தொடங்கும் இந்த உறவு என்றும் தொடர, மணம் வீசி மணம் பரப்ப மற்றவர்களும் மகிழ, வாழையடி வாழையென வளர, பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துவோம். இவர்களது பெற்றோரையும், உற்றார் உறவினரையும் நண்பர்களையும் நன்றியோடு நினைத்து கடவுள் அவர்களையும் காக்க வேண்டுவோம்.
மனம் +மனம் =மணம்
இரு மனங்கள் சேர்ந்தால் அது திருமணம்.
ஆக இது
உறவின் மணம்
உணர்வின் மணம்
உயிரின் மணம்...
உங்கள் இருவருக்கும் இனிய மண வாழ்த்துக்கள்!